மங்கோலியா நாட்டில் தட்டம்மை பாதிப்பினால், பலியானோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகத் தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நோயினால், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.