பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கமளித்துப் பேசிய அவர்,
பயங்கரவாதத்தைக் காங்கிரஸ் இயல்பாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாகப் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான்தான் காரணம் எனக் காங்கிரஸ் ஒருபோதும் குற்றஞ்சாட்டியது இல்லை எனக் கூறிய அமைச்சர் ஜெய்சங்கர்,
பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன் பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கக் காங்கிரஸ் முயல்வதாகவும் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் தீவிர முயற்சியால் பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் பிரதமர் மோடி சரிசெய்து வருவதாகவும் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவைப் பாகிஸ்தான் நிரந்தரமாகக் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த ஜெய்சங்கர், தண்ணீரும், ரத்தமும் ஒருசேர ஓட முடியாது எனவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.