கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகச் சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை நேரில் பார்வையிட்டார்.
அப்போது பேட்டியளித்த அவர், கீழடி அகழாய்வு தமிழர்களின் பழமையான நாகரீகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.
அருங்காட்சியகம் கட்டும் பணியைத் தொடங்கியதும், கீழடி என் தாய்மடி எனப் பெயர் சூட்டியதும் அதிமுகதான் எனச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.