வேலூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில், சுற்றித்திரிந்த ஏழு அடி நீள சாரைப்பாம்பை கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி பாம்பைப் பிடித்தனர். பின்னர், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.