சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் ஒரு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய லிப்ட் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகை கட்டடத்தில் ஒரு லிப்ட் மட்டும் உள்ளதால், மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோரைச் சந்திக்க வரும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனால், தற்போது உள்ள மின்தூக்கிக்கு எதிரே உள்ள பகுதியில் புதிய லிப்ட் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட ஒப்பந்தங்களில் ஒருவர் கூட பங்கேற்காததால், 16 நபர்களை தூக்கிச் செல்லும் வகையில் புதிய மின்தூக்கிக்கு ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், ஒரு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய லிப்ட் அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.