தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மாநில பொதுச்செயலாளராக கேசவ விநாயகன் மற்றும் துணைத் தலைவர்களாக எம்.சக்கரவர்த்தி, V.P.துரைசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
K.P. ராமலிங்கம், கரு.நாகராஜன், கனகசபாபதி ஆகியோரும் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டால்பின் ஸ்ரீதர் மற்றும் குஷ்புவை மாநில துணைத் தலைவர்களாகவும் பொன்.வி.பாலகணபதியை மாநில பொதுச் செயலாளராகவும் நியமித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
பேராசிரியர் ராம.ஸ்ரீநிவாசன், A.P.முருகானந்தம் ஆகியோர் மாநில பொதுச் செயலாளர்களாகவும், கராத்தே தியாகராஜன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வினோஜ் P.செல்வம், அஸ்வத்தாமன், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோரும் பாஜக மாநில செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில இளைஞர் அணித் தலைவராக S.G.சூர்யா, மாநில மகளிர் அணித் தலைவராக கவிதா ஸ்ரீகாந்த், விவசாய அணி தலைவராக G.K.நாகராஜ் ஆகியோர்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில பொருளாளராக S.R.சேகர், மாநில இணை அமைப்பாளராக K.T.ராகவன் மற்றும் மாநில ஊடக அமைப்பாளராக ரெங்கநாயகலு ஆகியோரையும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.