கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பிகார் நோக்கிச் சென்ற பாக்மதி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் அடங்கிய குழுக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில், ரயில் விபத்திற்குள்ளானதற்கு சதிச்செயலே காரணம் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் தண்டவாளத்தில் இருந்த போல்டுகள் மற்றும் நட்டுகள் வேண்டுமென்றே அகற்றப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.