இளம் குற்றவாளிகளின் மனநலன் மற்றும் உடல் நலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மணிக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
சேலம் மத்திய சட்டக் கல்லூரியில், இளம் குற்றவாளிகளின் மறுவாழ்வு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநில மனித உரிமை ஆணைய தலைவரும், கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான மணிக்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிக அளவிலான இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு போதைப் பொருள் முக்கிய காரணமாக இருப்பதாக கூறிய அவர், இளம் குற்றவாளிகளின் மனநலன் மற்றும் உடல் நலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.