அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளி விமானி கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்னியாபோலிஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட டெல்டா போயிங் விமானம், சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது.பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு குவிந்த போலீசார், விமானத்திற்குள் நுழைந்து துணை விமானி ருஷ்டம் பகவாகரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்திய வம்சாவளியான ருஷ்டம் பகவாகர், கடந்த ஏப்ரல் மாதம் 10 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், விமானத்தில் வைத்தே அவரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து ருஷ்டம் பகவாகரை பணியிடை நீக்கம் செய்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.