சேலம் தளவாய்பட்டியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தியில் இருந்த சதீஷ்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.