திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.வி.ஆர் நகரில் திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணைச் செயலாளர் நாராயணமூர்த்திக்கு சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வந்த நிலையில் பள்ளியின் கழிவறையில் வைத்து ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் வைத்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.