ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த கோவை இன்டர்சிட்டி விரைவு ரயிலில் இருந்து தேநீர் அருந்துவதற்காகப் பயணி ஒருவர் இறங்கியுள்ளார்.
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கியுள்ளார். அப்போது, நடைமேடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் அப்துல் ரபிக் என்பவர் அந்த பயணியை விரைந்து சென்று மீட்டார்.
இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் சவுரவ்குமார், அப்துல் ரபிக்கை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.