‘சயாரா’ திரைப்படத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்ப பார்வையாளர்களின் விருப்பங்கள் மாறி வருவதைக் காட்டுவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த ‘சயாரா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் அமீர்கான், சயாரா திரைப்படம் இளம் தலைமுறையினரைப் பெரிதும் கவர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் படத்தின் வெற்றி ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்ப பார்வையாளர்களின் விருப்பங்கள் மாறி வருவதைக் காட்டுவதாகவும் அமீர்கான் தெரிவித்தார்.