சென்னை தாம்பரம் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் மோதி பெண் தூய்மை பணியாளர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். நள்ளிரவு சேலையூர் – வேளச்சேரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது அங்கு அதிவேகமாக வந்த கார் ராணி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.