சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு செங்கொடி சங்கம் மற்றும் சிஐடியு சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தூய்மை பணியாளர்களின் தொழிலைத் தனியார் மயமாக்கி, அரசு தங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்க வேண்டாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.