மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!
Oct 17, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்காவில்  8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பத்தால் 13 அடி உயரம் வரையிலான பேரலைகள் உருவாகி, சுனாமி தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பசிபிக் பெருங்கடலில் உள்ள நெருப்பு வளையம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

ஒரு போர்த்துகீசிய மாலுமி மற்றும் ஆய்வாளரான ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), ஸ்பெயினின் அரசவைக்காக பணியாற்றினார். 1519ம் ஆண்டில் பூமியைச் சுற்றிவர முதல் கடற்பயணத்தை ஸ்பெயினிலிருந்து தொடங்கினார். ஐந்து கப்பல்கள் கொண்ட குழுவை வழிநடத்திச் சென்ற ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), வழியில் பிலிப்பைன்ஸில் உள்ள மக்டான் தீவில், உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட சண்டையில் கொல்லப்பட்டார்.

மாகெல்லனின் பயணம் முழுமையாக நிறைவடையவில்லை. ஆனாலும் அவரது கப்பல்களில் ஒன்றுமட்டும்  ஸ்பெயினுக்குத் திரும்பி, பூமியைச் சுற்றிய உலகின் முதல் பயணத்தை நிறைவு செய்தது. பசிபிக் பெருங்கடலைக் கடந்த முதல் ஐரோப்பியரான  ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), பெருங்கடலில் நீரின் அமைதியைக் கண்டார். அதனால்தான் இன்று வரை,பசிபிக் பெருங்கடல் என்று அழைக்கப் படுகிறது. பசிபிக் என்றால் அமைதியானது என்று பொருள்படும்.

இந்த பசிபிக் பெருங்கடலைச்  சுற்றிலும் ஆபத்தான எரிமலைகள் உள்ளன என்பதை ஃபெர்டினாண்ட் மாகெல்லனுக்குத் தெரிந்திருக்கவில்லை. நெருப்பு வளையம் என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு எரிமலைச் சங்கிலியாகும். நெருப்பு வளையம் ஒரு சரியான வட்டம் அல்ல, குதிரைலாடம் போன்ற  வடிவத்தைக் கொண்டது.

இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,சிலி,பெரு, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை,ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் உள்ளிட்ட 15 நாடுகள் இந்த நெருப்பு வளையத்துக்குள் உள்ளன.

இதில், தென்அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை,(Bering Sea) பேரிங் கடல் வழியாக தெற்கே நியூசிலாந்து வரையிலும்,  452 எரிமலைகள் ஒரு நெருப்புச் சங்கிலி போல நீண்டுள்ளது.

40,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நெருப்பு வளையம்,  ஜப்பான், இந்தோனேசியா, சிலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கியதாகும். உலகின் பூகம்பங்களில் தோராயமாக 90 சதவீதம் நெருப்பு வளையத்தைச் சுற்றி நிகழ்கின்றன.

உலகில் கடல் மட்டத்துக்கு மேலே உள்ள எரிமலைகளில்  75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை  நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளன. நெருப்பு வளையம் என்பது தட்டு டெக்டோனிக்ஸ் விளைவு எனப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் தரை, ஒரு கடல் தகடான பசிபிக் தட்டு, வட அமெரிக்க தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, பிலிப்பைன்ஸ் தட்டு, ஆஸ்திரேலிய-இந்திய தட்டு மற்றும் யூரேசிய தட்டு உள்ளிட்ட  தகடுகளால் சூழப்பட்டுள்ளது.

இந்த தகடுகளின் இயக்கம் அழிவுகரமான தட்டு விளிம்புகளில் துணை மண்டலங்களை உருவாக்குகிறது, இது எரிமலைகள் உருவாகவும் பூகம்பங்கள் ஏற்படவும் வழிவகுக்கிறது. 1883-ல் Krakatoa கிரகடோவா தீவில் ஏற்பட்ட பூகம்பம், 1906-ல்  சான் பிரான்சிஸ்கோபூகம்பம், 1960-ல் சிலியில் ஏற்பட்ட  பூகம்பம்,1964-ல் அலாஸ்கா பூகம்பம், 2004-ல் வடக்கு சுமத்ரா பூகம்பம், ஜப்பானில் சுனாமி, 2011-ல் ஜப்பானின் Fukushima ஃபுகுஷிமா அணுசக்தி பேரழிவு, 2016-ல்  ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட பூகம்பம் போன்றவை வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளாகும்.  8.5 ரிக்டர் அளவுக்கு மேல் பெரும்பாலான பூகம்பங்கள் நெருப்பு வளையத்துக்குள் மட்டுமே  உள்ளன.

நெருப்பு வளையத்தில் பூகம்பங்களை முன்கூட்டியே விஞ்ஞானிகளால் கணிக்க முடியாதா ? என்ற கேள்விக்கு பெரும்பாலான புவியியல் வல்லுநர்கள் நிலநடுக்கங்களைக் கணிப்பது சாத்தியமில்லை என்றே கூறுகிறார்கள். பூகம்பங்கள் எப்போது, எங்கு ஏற்படும் என்பதை எந்த துல்லியத்துடன் கணிப்பது இன்னமும் கடினமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், உலகெங்கிலும் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த நில அதிர்வு கருவிகளின் நெட்வொர்க், பூகம்பங்கள் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை சில நொடிகளில் வழங்குகின்றன.

இதில் கிட்டத்தட்ட நிகழ் நேரத்தில், தகவல்களை அளிக்கும் விஞ்ஞானிகளின் திறனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும்,நெருப்பு வளையத்துக்குள் இருக்கும் நாடுகளின் புவியியல் ஆய்வாளர்கள்,ஒன்றிணைத்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லா நாடுகளும்  கடல் மற்றும் நில அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவது மட்டுமே ஒரே வழி என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tags: Threatening Ring of Fire: More than 10 countries in fear of earthquakes and tsunamisமிரட்டும் நெருப்பு வளையம்பூகம்பங்கள்சுனாமி பீதி
Share
Tweet
SendShare
Previous Post

நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணம் : வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப்

Next Post

சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies