தேனியில் காற்றாலைகளின் மின் உற்பத்தி உச்சத்தை தொட்டுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி, கண்டமனூர் , காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு மே மாதத்தின் இறுதி நாட்கள் முதல் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் நாள் ஒன்றுக்கு 500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
போதுமான அளவு மின் உற்பத்தி கிடைக்க பெற்றதால் தினமும் 8 மணி நேரம் வரை காற்றாலைகளை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே காற்றாலைகள் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அரசுக்கு காற்றாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.