மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் நடந்துள்ள சொத்து வரி ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மதுரை மாநகராட்சியின் சொத்து வரியில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால், 200 கோடி ரூபாய் மட்டுமே ஊழல் நடந்திருப்பதாகக் கூறி சிறப்பு விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி மேயர், சேர்மன் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உண்மையை வெளிக்கொணர வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.