கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!
Sep 20, 2026, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதானி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட விழிஞ்சம் துறைமுகம் உருவான ஓராண்டு காலக்கட்டத்தில் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கி, ஒட்டுமொத்த கேரளாவின் தலையெழுத்தை மாற்றியிருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்சம் துறைமுகம், நாட்டின் முதல் மெகா டிரான்ஸ் ஷிப்மென்ட் கொள்கலன் முனையமாகும். அதானி குழும நிறுவனத்தால் கடந்த 2014-ம் ஆண்டு இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டபோதும், பெருமழையுடன் வந்த ஒக்கி புயல், கொரோனா நோய்த்தொற்று போன்ற பேரிடர்கள் கட்டுமான பணிகளில் தொய்வை ஏற்படுத்தின.

அதன் காரணமாக 10 ஆண்டுகள் கழித்து முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்து வைத்து நாட்டிற்காக அர்ப்பணித்தார். கேரளாவில் புதிய தொழில்கள் தொடங்குவது கடினம் என்ற பிம்பம் விழிஞ்சம் துறைமுகத்தின் உருவாக்கத்தால் தகர்த்தெறியப்பட்டது.

இந்த துறைமுகத்திற்கு இதுவரை 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவே கேரள மாநிலத்தின் மிகப்பெரிய தனியார் முதலீடாகவும் இருந்து வருகிறது. விழிஞ்சம் துறைமுகத்தில் இயற்கையாக உள்ள 20 மீட்டருக்கும் ஆழமான கடல் பகுதி, உலகின் மிகப்பெரிய கப்பல்கள் துறைமுகத்திற்குள் எளிதாக வந்து செல்ல வழியமைத்தது. ஒரே ஆண்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ரக கப்பல்கள் இந்த துறைமுகத்தின் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முதல் AUTOMATIC துறைமுகமாக உருவான விழிஞ்சம் துறைமுகம், ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்த LOADING மற்றும் UNLOADING போன்ற கடினமான பணிகளில் பெண்களும் சிறப்பாகச் செயல்பட வழிவகுத்தது.

தற்போது ஒரு PHASE மட்டுமே செயல்பட்டு வரும் விழிஞ்சம் துறைமுகத்தில் ஏற்கனவே, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளுக்குள் இரண்டாம் PHASE-ன் பணிகளும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த துறைமுகத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கடல் வழித்தடத்தில் இருந்து வெறும் 10 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள இந்த துறைமுகம் செயல்படத் தொடங்கிய ஒரே ஆண்டில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தின் உருவாக்கத்தால் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை நம்பியிருந்த பல இந்தியக் கப்பல்களுக்கு, ஒவ்வொரு பயணத்தின்போதும் பல நூறு அமெரிக்க டாலர்கள் மிச்சமாகி வருகிறது. இது இந்தியாவின் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து நாட்டின் பொருளாதாரம் பெருமளவு உயர மிகப்பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகளையும் அதானி குழும நிறுவனமே மேற்கொண்டு வரும் நிலையில், அதே நகரில் இந்த துறைமுகமும் அமைந்துள்ளது CREW CHANGE போன்ற காரணங்களுக்காக பல்வேறு கப்பல்கள் நாடி வரும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.

அதேபோல, எரிவாயு நிரப்பும் வசதிகளையும் இந்த துறைமுகத்தில் உருவாக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதற்காகவும் பல்வேறு கப்பல்கள் இந்த துறைமுகத்தைப் பயன்படுத்தும் நிலை உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடல் வாணிபத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவிற்குப் பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உருவான ஒரே ஆண்டில் நெதர்லாந்தின் ROTTERDAM, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விழிஞ்சம் துறைமுகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த துறைமுகத்தால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, அதானி குழும நிறுவனம் தங்கள் விழிஞ்சம் துறைமுகத்திற்கான மொத்த முதலீட்டில் இருந்து பெரும்பங்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த துறைமுகத்திற்கு எதிராகப் போராடிய மக்கள், தற்போது விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகே அரசு கொண்டு வர நினைக்கும் திட்ட ஒப்பந்தங்களை அதானி குழுமத்திடம் கொடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த அளவிற்கு மக்கள் மனதில் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் சம்பாதித்துள்ள விழிஞ்சம் துறைமுகம், 2025-ம் ஆண்டிற்கு முன்பே அமைந்திருந்தால் கடல் வாணிபத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் கோலோச்சியிருக்கும் எனக் கடல் வாணிப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: கேரளாVizhinjam Port changed the face of Keralaவிழிஞ்சம் துறைமுகம்அதானி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட விழிஞ்சம் துறைமுகம்
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

Next Post

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies