தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 20 நாட்களாக வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.
ஹைதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவுலா சுற்றுச்சூழல் பூங்கா அருகே சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டு வைத்துக் கண்காணித்த நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தை மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.