உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகச் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
நேற்று அம்மாநிலத்தில் உள்ள 40 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் காசியாபாத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் விஜய் நகர் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.