இந்திய ராணுவத்தின் தென்னிந்தியப் பகுதிகளுக்கான ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஸ்ரீஹரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தக்ஷன் பாரத் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்மாநிலங்களையும் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய, இந்திய ராணுவத்தின் தென்னக பிராந்திய கட்டமைப்பாகும்.
இதன் தலைமை அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் கரன்தீப் சிங் பிரார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் ஓய்வு பெற்றதால் புதிய தலைமை அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி பொறுப்பேற்றுள்ளார்.