கேரளாவில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி என்பவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள குத்தந்திரம் பாடலின் மூலம் பிரபலமானார்.
அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்களின் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள வேடன் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாகப் பலமுறை பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், வேடன் மீது கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.