தேனி மாவட்டம் வீரபாண்டியில் மது போதையில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் இரவு நேரத்தில் இரு இளம்பெண்கள், தங்களது ஆண் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மது போதையில் வந்த 3 இளைஞர்கள், இளம்பெண்களின் ஆண் நண்பர்களை அங்கிருந்து அடித்துத் துரத்தியுள்ளனர்.
பின்னர் இளம்பெண்களைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர், அருகே உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இளம்பெண்ணை மீட்டு மது போதை நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.