ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது.
ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக கில்மர் நிறுவனம், குயின்ஸ்லாந்து மாகாணம் யாடலா நகரில் செயல்படுகிறது.
அரசின் நிதியுதவிகளைப் பெற்று நாட்டிலேயே முதல் முறையாக ராக்கெட் ஒன்றை தயாரித்து விண்ணில் செலுத்த கில்மர் நிறுவனம் முடிவு செய்தது.
அதன்படி எரிஸ் என்ற ராக்கெட்டை தயாரித்தது. ஆனால் விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட் 14 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது.