தாய்லாந்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சுபான் மாகாணம், முயாங் மாவட்டத்தில் ஊருக்கு வெளியே பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்தக் கட்டடம் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், ஒன்பது தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.