திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற, மேல் குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள், சிறுத்தை பல் வைத்திருந்ததாக அவரைக் கைது செய்து, தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மாரிமுத்துவை கைது செய்த தமிழக வனத்துறையினர் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கழிவறைக்கு சென்ற மாரிமுத்து அங்கே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த போலீசார் மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.