ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார்.
காலை நடைபயிற்சியின் போது, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் மாலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் 2-வது முறையாக மீண்டும் சந்தித்தார்.
அவருடன் மகன் ரவீந்திரநாத், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி, வாசல்வரை வந்து வரவேற்றார்.
ஸ்டாலின் – ஓபிஎஸ் இடையேயான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நடைபெற்றது. ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.