நிதி முறைகேடு தொடர்பான புகாரில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான வேல்ராஜ், பதவிகாலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்றுடன் பேராசிரியர் வேல்ராஜ் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், நிதி முறைகேடு தொடர்பான புகாரில் அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இயந்திரவியல் துறையில் அவர் பணியாற்றியபோது ஏற்பட்ட நிதி முறைகேடு தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் மூலம், பணியிடை நீக்க உத்தரவுக்கான நகல் வேல்ராஜிடம் நேரில் வழங்கப்பட்டது.