மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும் மருத்துவருமான நம்பெருமாள்சாமி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவுச் செய்தியை துயரத்துடன் அறிந்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற கண் மருத்துவரான நம்பெருமாள்சாமி, பார்வையை மீட்டெடுக்கவும், எண்ணற்ற மக்களின் பார்வையைப் பாதுகாக்கவும் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கண் மருத்துவ துறையில் துல்லியமான சேவையால் அவர், சிறந்த நிபுணத்துவத்தைப் பெற்றார் என்றும், சிக்கலான கண் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து மக்களை காத்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு, சேவை செய்வதில் அவரது அர்ப்பணிப்புக்கு பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர் நம்பெருமாள்சாமி என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.