மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம், உண்மை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிலர் தங்கள் சுயநலம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஹிந்து தர்மத்தையும் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் பயங்கரவாதத்துடன் தொடர்பு செய்ய முயற்சி செய்ததாகவும் அவர் சாடினார்.
நீண்ட விசாரணைக்கு பிறகு, நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த குற்றச்சாட்டுகளை முறியடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.