புதுக்கோட்டை மாவட்டம் பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிலாக்குடிப்பட்டி தேவர் மலையில் உள்ள குடைவரை கோயில், சிவபெருமான் முன்பு 2 நந்திகள் அமைந்துள்ளதற்காக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இங்கு பெருமிழலை குறும்ப நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு, மூலவர் தேவநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு சுவாமியை தரிசித்தனர்.