செயற்கை நுண்ணிறவு தனது நிறுவன ஊழியர்களின் வேலையை மேம்படுத்துவதாக, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் வரவு, மனிதர்களின் வேலைகளை பறிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய நிறுவனங்களில் ஏ.ஐ. பயன்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, செயற்கை நுண்ணறிவு குறித்த தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். தனது நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை காரணம் காட்டி இதுவரை எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை எனவும், மாறாக ஊழியர்களுக்கு ஏ.ஐ. மிகவும் உதவிகரமாக இருந்து வருவதாகவும் கூறினார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால், ஊழியர்களின் செயல்திறன் 20 சதவீதம் வரை மேம்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஏ.ஐ குறித்து அதீத கவலை தெரிவிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ இன்னும் மேம்படவில்லை எனவும் கூறினார்.