தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குளித்தலை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் காத்தான், சுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் இடையே பூர்விக நிலத்தைப் பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நெல் அறுவடை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கந்தசாமியைச் சகோதரர்கள் இருவர் கழுத்தறுத்து கொலை செய்தனர்.
இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சகோதரர்கள் காத்தான், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.