திமுகவினர் விவசாய நிலங்களைப் பினாமிகள் பெயரில் விற்க முயல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பேசியவர்,
விவசாய நிலங்களை திமுகவினர் பினாமிகள் பெயரில் விற்க முயற்சி என்றும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் 40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று அன்புமணி குற்றம் சாட்டினார்.
விவசாய நிலத்தில் உள்ள மண்ணை ஒருபிடி கூட கையகப்படுத்த விடமாட்டோம் என்றும் அறிவுசார் நகரத்தை அறிவில்லாதவர்கள் தான் விவசாய நிலத்தில் அமைப்பார்கள் என்றும் 6 மாதத்தில் திமுகவினர் வீட்டிற்குப் போகப் போகிறார்கள் என்று அன்புமணி திட்டவட்டமாக கூறினார்.