பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? - தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Aug 23, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூமி நோக்கி மிகப்பெரிய ஆபத்து வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அது என்ன ஆபத்து என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா? இல்லையா?. நம்பலாமா? நம்பக் கூடாதா? என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்ற வருகின்றன.

ஆனால், ஏலியன்கள்  உள்ளதாகவோ, அவர்கள் பூமிக்கு வந்ததாகவோ இதுவரை வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாறு இந்தாண்டு மாற்றி எழுதப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏலியன்கள் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தக் கூட திட்டமிட்டுள்ளதாகவும் கூறி, அவர்கள் பரபரப்பைக் கூட்டியுள்ளனர். இது தொடர்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  வான்இயற்பியலாளர் அவி லோயப் உள்ளிட்ட 3 பேர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், பூமியை நோக்கி விண்கலம் ஒன்று அசுர வேகத்தில் வந்துகொண்டு இருப்பதாகவும், இது சர்வ நிச்சயமாக ஏலியன்கள் அனுப்பிய விண்கலம்தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஐ அட்லஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், 24 கிலோ மீட்டர் பரபரப்பளவு கொண்டுள்ளதாகவும், சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் வரை, பூமியில் இருந்தபடி தொலைநோக்கி வழியாக விண்கலத்தைப் பார்க்கலாம் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், நவம்பர் இறுதியில் அந்த விண்கலம் சூரியனை நெருங்கும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கலத்தின் மூலம் வேற்றுகிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் சிலர் எச்சரிக்கின்றனர்.

ஆனால், இவை அனைத்துமே அதீத கற்பனை என விஞ்ஞானிகளின் மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்து வருகிறது. பூமியை நோக்கி வரும் இந்த வான்பொருள் வால் நட்சத்திரமாக இருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், இப்போதைக்கு எதுவும் முடிவாகவில்லை. அந்த வான்பொருள், வெறும் வால்நட்சத்திரம்தானா, அல்லது உண்மையிலேயே ஏலியன்களின் விண்கலமா என விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

2025ம் ஆண்டு ஏலியன்கள் மனிதர்களை தொடர்பு கொள்வார்கள் என, பாபா வாங்கா ஏற்கனவே ஆருடம் தெரிவித்திருந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களின் தற்போதைய அறிக்கை, அந்த ஆருடத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வேற்றுகிரகவாசிகள் எப்படி இருப்பார்கள், வந்தால் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஏலியன்கள் பூமிக்கு வந்தால், முதல் வேலையாக அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்பதுதான், இதுவரை எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் மூலம் நாம் அறிய வரும் செய்தி. அதன்படி பார்த்தால், இந்தாண்டு ஏலியான்கள் வந்தாலும், அவர்களின் முதல் குறி அமெரிக்காவாகத்தான் இருக்கும் எனவும், ஆகவே இந்தியர்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும் நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Tags: Aliens coming towards Earth? - Scientists warn that they may attackபூமியை நோக்கி வரும் ஏலியன்கள்?
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவினர் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் விற்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு!

Next Post

“பிளாக்மெயில்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு!

Related News

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies