உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா - சிறப்பு தொகுப்பு!
Aug 21, 2026, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 21, 2026, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் வெளிநாட்டு இறக்குமதியைக் குறைக்கவும், 405 பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்துறைக்கு 3,070 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக வாய்ப்பை வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 15,700-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தளவாட பொருட்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதன் விளைவாக, சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மார்ச் வரை உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து, உள்நாட்டு உற்பத்தி உட்பட சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் ஆணைகளையும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு வளர்ச்சி மற்றும் உற்பத்திக்காக, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களையும் மற்றும் சேவைத் தலைமையகங்களையும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் இந்தியத் தொழில்துறையுடன் இணைக்கும் நோக்கில், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஸ்ரீஜன் பாதுகாப்பு இணையதளத்தை SRIJAN Defence Portal மத்திய பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தியது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சேவைத் தலைமையகங்களால் 33,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தளவாட பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு SRIJAN Defence Portal வழிவகுத்துள்ளது. இதில், ஐந்தாவது நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்களின் கீழ் அறிவிக்கப்பட்ட 5,012 பொருட்களின் உற்பத்தியும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் ஆறாவது ‘நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை பாதுகாப்பு உற்பத்தித் துறை வெளியிட்டுள்ளது.

இதில் 16 பொருட்கள் இந்திய கடலோரக் காவல்படையிலிருந்தும், மீதமுள்ள 389 பொருட்கள் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை இறக்குமதியை படிப்படியாக நிறுத்தும் இந்தக் காலக்கெடு வரும் டிசம்பர் முதல் 2029 டிசம்பர் வரை அமலில் இருக்கும் என்றும், அதற்குள், இந்தப் பொருட்களுக்கான அனைத்து கொள்முதல்களும் இந்தியத் தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இந்த 405 பொருட்களும் இரண்டாம் நிலை அசெம்பிளிகள் (secondary assemblies), துணை அமைப்புகள், மூலப்பொருட்கள் மற்றும் சோனார், ரேடார், தீக்கட்டுப்பாட்டு அமைப்புகள் (fire control systems) மற்றும் செயற்கைக்கோள்கள் போன்ற பாதுகாப்பு மின்னணுவியல் சாதனங்கள் ஆகிய வகைகளின் கீழ் வருகின்றன.

இப்பட்டியலில் விமானப்படை, தரைப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் முக்கிய ராணுவ தளங்களை (platforms) பராமரிக்க உதவும் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH), இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் (LUH), Su-30MKI, இலகுரக போர் விமானம் (LCA) தேஜஸ் மற்றும் AL-31FP என்ஜின்கள்,முக்கிய போர் பீரங்கிகளான T-72 மற்றும் T-90 மற்றும் BMP-II காலாட்படை போர் வாகனங்கள்,போர்க்கப்பல் துணை அசெம்பிளிகள் மற்றும் Konkurs-M, Invar மற்றும் MRSAM ஏவுகணை அமைப்புகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

முந்தைய ஐந்து பட்டியல்களில் இலகுரக பீரங்கிகள், பீரங்கி துப்பாக்கிகள், அழிக்கும் கப்பல்கள் (destroyers) மற்றும் பயிற்சி விமானங்கள் போன்ற முக்கிய உபகரணங்களின் இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப் பட்டிருந்தன. இந்த வழிமுறைகள் விநியோகச் சங்கிலியில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

509 தளவாடங்களின் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ள நிலையில் தடை செய்யப்பட்ட உதிரிபாகங்களின் பட்டியல் 5,400-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்புத் துறையில் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பு 49சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கான மூலதனச் செலவு வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

2029-2030 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 3 லட்சம் கோடி ரூபாய் மற்றும் ராணுவத் தளவாட ஏற்றுமதியில் 50,000 கோடி ரூபாய் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

2016-20 மற்றும் 2021-25 காலகட்டங்களுக்கு இடையே இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4 சதவீதம் குறைந்துள்ளது. உலகளாவிய ஆயுதப் பரிமாற்றத்தில் 8.2 சதவீத பங்களிப்புடன், ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளதாக கடந்த மார்ச் மாதத்தில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன SIPRI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: reduce foreign importsdefense itemsdomestic vendorsMinistry of Defencedomestic defense industry.public sectorpromote domestic products
Share
Tweet
SendShare
Previous Post

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

Related News

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத்; சேரை வீசி தாக்கிய திமுகவினர்

மீம்ஸ்களால் வசூல் மழை; சீனாவில் விநோதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies