ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 3 நாள்கள் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவடைந்தது.
விசாகப்பட்டினம் அருகே குடிலோவா பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலை, சமூக பிரச்சினைகள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ்-ஸுடன் தொடர்புடைய 32 அமைப்புகளைச் சேர்ந்த 326 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இளைஞர்களின் எதிர்காலம், நாட்டின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
















