மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்
Oct 6, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

Manikandan by Manikandan
Oct 6, 2026, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக தூதரக ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த‌ நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 39 இந்தியர்கள் இலங்கை சிறைகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை விரைவாக விடுவித்து தாயகம் திரும்பச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தூதரக ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக் கூடாது என்றும், கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags: highcourtMaduraicentral governmentrameshwaramfishermen
Share
Tweet
SendShare
Previous Post

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

Next Post

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies