ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்
Oct 6, 2026, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

Manikandan by Manikandan
Oct 6, 2026, 02:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் தனது முதல் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப ரீதியான Breakout நிலைக்கு மிக அருகில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான 90 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் நினைத்தால் ஒரு சில வாரங்களிலேயே தயாரித்துவிட முடியும் என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் இன்னும் சில நாட்களில் அணு ஆயுதம் தயாரித்து விடும் என்ற காரணத்தினாலேயே ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் நடான்ஸ் (Natanz) மற்றும் ஃபோர்டோ (Fordow) போன்ற ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் மீது பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா நடத்தியதில் அந்த அணுசக்தி மையங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த தாக்குதல்களால் குறைந்த அணுசக்தி திட்டத்தின் வேகத்தை ஈரான் ரகசியமாக மீட்டெடுத்து வருகிறது.

60 சதவீத செறிவூட்டல் யுரேனியத்தைத் தன்வசம் வைத்துள்ள ஈரான் அதிலிருந்து அணு ஆயுதத்திற்குத் தேவையான 90 சதவீத செறிவூட்டல் யுரேனியத்தை உருவாக்குவது மிக எளிதானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய செறிவூட்டல் யுரேனிய இருப்பைக் கொண்டு சுமார் 10 அணு ஆயுதங்களை ஈரானால் உருவாக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிடும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலிரேசா சலிமி, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்தும் ஈரான் நாடாளுமன்றம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் 60 சதவீதம் வரை செறிவூட்டலை அனுமதிக்கும் சட்டம் ஈரானில் உள்ளதாகவும் அந்தச் சட்டம் மாற்றியமைக்கப் படாது என்றும் தெளிவாக கூறியுள்ளார்.

இதற்கிடையே அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தமான NPT-யின் உறுப்பினராகவே ஈரான் நீடிக்கும் என்றும், அந்த ஒப்பந்தத்தில் நீடிக்கும் வரை ஈரான் தனது ஒப்பந்தக் கடமைகளைத் தொடர்ந்து பின்பற்றும் என்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் NPT ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாட்டின் அரசியல் மற்றும் அறிஞர்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஈரானின் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் ரஷ்யாவின் முன்மொழிவையும் பரிசீலித்து வருவதாக கூறியுள்ள பாகாயி, தனது தேசிய நலன்களின் அடிப்படையில் ஈரான் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அணுசக்தி விஷயங்கள் தொடர்பாக ரஷ்யாவுடன் ஆலோசனைகள் நடந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ள பாகாயி, சீனாவுடன் ஒருங்கிணையும் திட்டமும் உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாத இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், ஏழு நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் முன்மொழிவை ஈரான் கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கு ஈடாக அணுசக்தித் திட்டம் ஒரு சலுகையாக வழங்கப்படவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.

இத்தகைய சூழலில், மத்திய கிழக்குக்கு தனது மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுவையும், கூடுதல் கடற்படை காலாட்படை (Marine Corps) வீரர்களையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 10,000 வரையிலான கூடுதல் வீரர்கள் களமிறக்கப்படலாம் என்றும், நவம்பர் மாத இறுதிக்குள் அவர்கள் மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்து சேருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Iranatom bomburaniumenrich
Share
Tweet
SendShare
Previous Post

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

Related News

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies