சென்னையில் கடந்த சில தினங்களாக நடந்த பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது
இதில் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் பதிவெண் இல்லாத வாகனங்கள் என 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
கடந்த 3 தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பைக் ரேசை முற்றிலுமாக தடை செய்யும் வரை நடவடிக்கை தொடரும் எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
















