தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்
பெரம்பூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது
பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன், திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
அப்போது தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுக்களை தாக்கல் செய்து வாதங்களை முன்வைக்கப்பட்டது
உரிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்
ரூ. 600 கோடிக்கு மேல் தனக்கும், மனைவிக்கும் சொந்தமான சொத்துகளின் விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் என எல்லா விவரங்களும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக விசாரணை நாளை வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
















