2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் - சிறப்பு தொகுப்பு!
Oct 5, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 19, 2026, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உயர்தர நீண்ட தூர ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்திய ரயில்வே 50 புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 12 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் மக்களின் நீண்ட தூரப் பயணங்களை மேம்படுத்தியுள்ளன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரயில்கள், இந்தியாவின் ரயில் பொதுப்போக்குவரத்து அமைப்பையே முழுமையாக மாற்றியமைத்துள்ளன.

விமானங்களுக்கு இணையான சொகுசு வசதிகள், அதிவேகப் பயணம், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் என வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரியில் ஹவுரா மற்றும் காமாக்யா இடையே இந்தியாவின் முதல் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் 11 ஏசி 3-டயர் பெட்டிகள், நான்கு ஏசி 2-டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்புப் பெட்டி ஆகியவை உள்ளன.

இந்நிலையில் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது, ​​ஐசிஎஃப் பொது மேலாளர் மணீஷ் அகர்வால் 24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொகுப்பின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான பெட்டிக் கட்டமைப்பு, பெட்டிகளுக்கிடையேயான இணைப்புகள் மற்றும் கீழ்ச்சட்டக உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தி வரைபடங்கள் தயாராக உள்ளதாகவும் அகர்வால் கூறியுள்ளார்.

அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முக்கியமாக பகல் நேர வழித்தடங்களில் இருக்கை வசதி மட்டும் கொண்ட ரயிலாகவே இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரப் பயணங்களுக்கு ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் நாட்டின் உயர்தர ரயில் பயணச் சேவையில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இயக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட ஸ்லீப்பர் ரயிலுடன் ஒப்பிடுகையில், வரவிருக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொகுப்புகள் 24 பெட்டிகளைக் கொண்டிருக்கும் என்றும், 16 பெட்டிகள் கொண்ட ரயிலை விட 24 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சுமார் 1.5 மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

பெட்டி கட்டமைப்பு, பெட்டி இணைப்புகள் மற்றும் அடிப்பகுதி உபகரணங்கள் தொடர்பான வடிவமைப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் கூடுதல் ரயில் தொகுப்புகள் கிடைப்பதன் மூலம், கூடுதல் நீண்ட தூர வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

24 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 17 AC 3-tier பெட்டிகள், ஐந்து AC 2-tier பெட்டிகள், ஒரு ஏசி முதல் வகுப்புப் பெட்டி மற்றும் ஒரு pantry car ஆகியவை இடம்பெறலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும் அதிகாரப்பூர்வமாக இந்திய ரயில்வே இந்த தகவல்களை உறுதி படுத்தவில்லை.

அடுத்த ஆண்டு இறுதிக்குள், மொத்தம் 50 அதிநவீன ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதே போல் அடுத்த தலைமுறை அம்ரித் பாரத் 3.0 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, பொது வகுப்பு (general class) மற்றும் ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளுடன் கூடிய மற்றொரு மலிவு விலை பயணத் தேர்வை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல் கல்லாக அதிநவீன ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என்று பாராட்டப்படுகிறது.

Tags: indian railways50 new sleeper-class Vande Bharat trainspremium long-distance rail servicespublic rail transport system.
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Next Post

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

Related News

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies