தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
தாராபுரம் முதல் மூலனூர் வரை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு விஜய்யின் ரோடு ஷோ நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் விஜய், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகரை சென்றடைகிறார்.
அங்கிருந்து பிரசார வேனில் புறப்பட்டு உடுமலை ரவுண்டானா, பெரியார் சிலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
விஜய்யின் ரோடு ஷோவை முன்னிட்டு அவர் செல்லும் வழித்தடங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
















