தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகையில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் உதகையின் மத்திய பேருந்து நிலையம், புளூமவுண்டெய்ன் உள்ளிட்ட பகுதிகளில், சாலை ஓரங்களை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களைச் சாலையில் விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.