தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வரத்துக் குறைவால் செண்டு பூக்களின் விலை 12 மடங்கு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரம், மரிகுண்டு, அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படும் செண்டு பூக்கள் தெப்பம்பட்டி சாலையில் உள்ள மலர் சந்தையில் ஏலம் விடப்படுகின்றன.
தற்போது செண்டு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போன செண்டு பூக்கள், தற்போது 12 மடங்கு விலை உயர்ந்து 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.