கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு காஸ்பர் ரூட், ஸ்வெரேவ் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-7, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸை 5-7, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.