ஜிம்பாப்வே அணியின் லெஜெண்ட் பிரண்டன் டெய்லர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தேர்வாகியுள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் இரண்டாவது டெஸ்ட்டில் பிரண்டன் டெய்லர் அணியில் இணையவிருக்கிறார்.
ஐசிசியின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி லெஜெண்ட் பிரண்டன் டெய்லர், மூன்றரை ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.