திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை போடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் முடியனுர் செம்மண் மேடு பகுதியில் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் தார் சாலை போட்டு முடிக்கப்பட்டதாகச் சுவர் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுமார் 450 மீட்டர் தூரம் மட்டும் தார் சாலை போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தார் சாலையைப் பார்வையிட வந்த ஊராட்சி செயலாளரை தடுத்த அப்பகுதி மக்கள் 16 லட்சம் ரூபாய் நிதி எங்கே எனக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.