டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடர்கிறார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தடுமாறி வரும் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ரிஷப் பண்ட் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடம் வகிக்கிறார். இந்திய கேப்டன் சுப்மன் கில் 9-வது இடத்தில் நீடிக்கிறார்.